பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

பறவைக் கண் நோய்: கிளியோஸ்போரியம் முசேரம்

தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஆரம்பகட்டத்தில், சிறிய, வட்ட, கருப்புபுள்ளிகள்பழங்களில் தோன்றுகிறது. பின்னர் இந்தபுள்ளிகளின் அளவு அதிகரித்து பழுப்புநிறத்திற்கு மாறும். பழத்தின்தோலானது கருப்பு நிறத்தில் மாறும் மற்றும் இளஞ்சிவப்பு ந்றத்தில் மூடப்பட்டிருக்கும். இறுதியாக தார் முழுவதுமாக இந்நோய் பரவி மொத்தமாக பாதிக்கிறது.
  • இதன் தாக்கத்தால் வாழைப்பழங்கல் முன்கூட்டிய பழுத்தும் மற்றும் சுருங்கியும் பழங்களின் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் வித்துக்கள் காணப்படும்
  • வாழைப்பழத்தின் காம்புப்பகுதியில் கருப்பு புண்கள் ஏற்படுவதும் வாழைப்பழங்கள் தளர்ந்தும் காணப்படும்
  • சில நேரங்களில் முக்கிய கொத்து தண்டு நோயுற்ற காணப்படும். தாக்கப்பட்டபழங்கள் கருப்பு நிறத்தில் மற்றும் அழுகியும் காணப்படும். முதிர்ச்சியடையாத பழங்களில் பழுப்பு நிற வட்டுகள். பழங்களில் கருப்பு நிறம் மற்றும் சுருக்கம். முழுதாரும் கருப்பு நிறத்தில் மாற்றம்
         
  பழுப்புநிற புள்ளிகள்        
நோய்க்காரணி:
  • இவை பொதுவாக வட்டமானது அல்லது சிலநேரங்களில்நீண்டது.
  • நோயானது காற்றில் பூசணஇழைகள் மூலமாகவும் அடிக்கடி வாழைபூக்களுக்கு வரும் பல பூச்சிகள் மூலம் பரவுகிறது.
  • உயர் வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை நோய் பரவ சாதகமாகவே உள்ளது.

கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • அறுவடை மற்றும் பெற்று அனுப்பும் போதும் பழங்களில் சேதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை எரித்து அழிக்கவேண்டும்.
  • முறையாக பராமறிக்க வேண்டும்.
  • நிலத்தில் களைகளை அழித்தும், நல்லவடிகால் வசதி அமைத்தும் பராமறிக்க வேண்டும்.
  • அறுவடை மற்றும் பெற்று அனுப்பும் போதும், சேமிக்கும்போதும் பழங்களை முடிந்தவரை தொற்றுஇருந்து பாதுகாத்தும்.
  • தார்களை முதிர்ந்த சரியான தருணத்தில் அறுவடை செய்யவேண்டும் .
  • சரியான உரமிடுதல் மூலமும் தொற்றை தடுக்கலாம்.

இயந்திரவியல் முறை

  • தொற்று ஏற்ப்பட்ட சேய்மை அரும்புகளை நீக்கப்படுவதன் மூலம் மற்றவைகளை தொற்றிலிருந்து தடுக்கப்படுகிறது.
  • அறுவடைக்குபின், தார்களில் எந்த தொற்றும் இல்லாதவைகளை 7 °-10° செல்சியஸில் கவனமாக சேமித்து வைக்கவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015